Tuesday 17 January 2012

ஸ்வாமி சிவயோகானந்தாவின் உபன்யாஸங்கள்

ஸ்வாமி சிவயோகானந்தாவின் உபன்யாசங்கள் திருமூலரின் திருமந்திரம் மற்றும் ரமணரின் ஞான விசாரம்

     சின்மயா மிஷன், புதுச்சேரி, வரும் 20 முதல் 24 ஜனவரி 2012 வரை ஞான சத்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது. மதுரை சின்மயா மிஷனின் ஆச்சார்யாவான ஸ்வாமி சிவயோகானந்தா அவர்கள் இந்த பேருரைகளை நிகழ்த்த உள்ளார். இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனேக ஞான யக்ஞங்கள் இந்தியாவில் பல இடங்களில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை நிகழ்ச்சியின் தலைப்பான ‘திருமூலரின் திருமந்திரம்‘ 20-01-2012 முதல் 24-01-2012 வரை மாலை 6.45 முதல் 8.00 வரை ஆறுமுகா திருமண நிலையத்தில் (முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில்) நடைபெறும். மேலும், ரமணரின் ஞான விசாரம் என்கிற தலைப்பில் 21.01.2012 முதல் 24.01.2012 வரை காலை 6.45 முதல் 7.45 வரை 108, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, 17வது குறுக்கு கட்டிங், லாஸ்பேட் என்கிற இடத்தில் அமைந்துள்ள ‘சின்மய சூர்யா‘ வில் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொண்டு பெரிதும் பயனடைய சின்மயா மிஷன் உங்களை அன்புடன் அழைக்கிறது. அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு : 2254914, 8870389370 என்கிற எண்களை அணுகலாம்.

q

No comments:

Post a Comment