Sunday, 29 January 2012

சின்மய சூரிய பகவான் கோயிலில் ரதசப்தமி சிறப்பு பூஜை


தை மாதம், உத்திராயணம், வளர்பிறை 7ம் நாள் ஸப்தமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடதுருவத்தை நோக்கி பவனி வருகிறார். சூரியனது ஏழு குதிரைகள், 7 நாட்கள் மற்றும் வானவில்லின் 7 வண்ணங்களை குறிக்கிறது. மேலும், இந்நாள் கஷ்யபமுனிக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியனின் பிறந்தநாளாக கருதப்பட்டு சூரிய ஜெயந்தியாகவும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

கம்போஜ்ய அரசின் மன்னரான யஷோவர்மா வெகு காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருந்தார். ரதஸப்தமி அன்று சூரியனை வேண்டி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும் வரலாறு உள்ளது. மேலும், ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் சூரிய பகவானை வேண்டி ஆரோக்கிய ஸப்தமியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரிய பகவானுக்கு விசேஷமான எருக்கை இலை நீரில் குளித்து, கோதுமை பாயாஸம் நேவித்யம் செய்து வழிபடுவது வழக்கம்.

இந்த சிறப்புமிக்க ரத ஸப்தமி 30.01.2012 (திங்கட்கிழமை) அன்று சின்மய சூரிய பகவானுக்கு விசேஷ பூஜைகளுக்கு காலை 6.30 முதல் 11 வரை மற்றும் மாலை 4.00 முதல் 8.30 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்குகொண்டு சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற அன்புடன் சின்மயா மிஷன் அழைக்கிறது.

No comments:

Post a Comment