Thursday 12 January 2012

சின்மய சூர்யா திருக்கோயிலில் பொங்கல்-மகர சங்கராந்தி தின திருவிழா

பொங்கல் பண்டிகை என்பது காண முடிகின்ற கடவுளான கதிரவனை நினைவுகூர்ந்து, நன்றி பாராட்டி மரியாதை செய்விக்கும் ஒரு உன்னத நிகழ்வாகும். சூரியனே அறிவுக்கு, ஆற்றலுக்கு, ஆரோக்கியத்திற்கு, வளம் ஆகியவைகளுக்கு அதிபதி. தை மாதம் உத்திராயண காலத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இக் காலம் மிக புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் சூரியனை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

15.01.2012 (ஞாயிறு) அன்று கிருஷ்ணா நகரில் சூரிய பகவானுக்கென அமைந்துள்ள சின்மய சூர்யா திருக்கோயிலில் பொங்கல்-மகர சங்கராந்தி தினத்தை விமரிசையாய் கொண்டாட சின்மயா மிஷன் உத்தேசித்துள்ளது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 8.30 வரை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், விசேஷ அர்ச்சனை மற்றும் சூர்ய காயத்ரி அகண்ட ஜபம் நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் இந்த பூஜைகளில் கலந்து கொண்டு சின்மய சூர்ய பகவானின் பரிபூரண அருளைப் பெற சின்மயா மிஷன் உங்களை அன்புடன் அழைக்கிறது. இத்திருக்கோயிலின் முகவரி கீழ்வருமாறு சின்மய சூர்யா, 108, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, 17வது குறுக்கு, லாஸ்பேட், புதுச்சேரி -8. விபரங்களுக்கு : 2254914, 8870389370 என்கிற எண்களை அணுகவும்.

No comments:

Post a Comment